விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிக்க வேண்டிவரும். புதிய முயற்சியில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். நண்பர்கள் உங்களிடம் நல்ல ஆலோசானையை கேட்டு பெறுவர். நட்பு வட்டம் அதிகமாகும். மிக முக்கிய நபர்களுக்கு தேவையான உதவிகளை வலியச் சென்று செய்து தருவீர்கள். வண்டி, வாகனங்களை மாற்ற நினைப்பீர்கள். சில சமயம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். நீங்கள் அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் கவனமாக பணிகளை மேற்கொள்ளவும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய ஆலோசனைகிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆனால் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com